
அக்டோபர் 15 முதல் ரூ.2,000-க்கு மேற்பட்ட வணிகம் சார்ந்த யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு 0.4 சதவீத எம்டிஆர் கட்டணம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், ஓடிடி சந்தாக்கள், காப்பீட்டு பிரீமியங்கள் மற்றும் மாதத் தவணைகள் போன்ற யுபிஐ தானியங்கி (ஆட்டோபே) முறை செலுத்தல்களுக்கு இந்த கட்டணம் வசூலிக்கப்படாது என என்பிசிஐ தெளிவுபடுத்தியுள்ளது.
வழக்கமான வணிகப் பயன்பாட்டுக்கும் ஆட்டோபே முறைக்கும் இடையே உள்ள முக்கிய வேறுபாட்டைக் கருத்தில் கொண்டு இந்த விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.