
சென்னை ஒருங்கிணைந்த பெருநகரப் போக்குவரத்து ஆணையம் (CUMTA), சாலைத் திட்டங்களுக்கான நிலம் கையகப்படுத்தும் பணிகளை வேகப்படுத்த செயற்கை நுண்ணறிவு மற்றும் Web GIS தொழில்நுட்பம் கொண்ட புதிய தளத்தை உருவாக்குகிறது.
தற்போதுள்ள PDF மற்றும் AutoCAD வரைபடங்களை AI மூலம் தானாக அடையாளம் கண்டு டிஜிட்டல் சாலைப் பதிவேடாக மாற்றும் வசதி இந்த புதிய அமைப்பில் இடம்பெற உள்ளது.
இந்தத் தொழில்நுட்பம் மூலம் நிலத்தின் பரப்பளவு, கையகப்படுத்தும் செலவு மற்றும் பாதிக்கப்படும் பகுதிகளைத் துல்லியமாகக் கணக்கிட்டு, திட்டமிடலில் ஏற்படும் காலதாமதத்தைக் குறைக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.