
மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா அடுத்த ஐ.பி.எல். தொடருடன் ஓய்வு பெறுவாரா என்பது குறித்து முன்னாள் வீரர் ஆர்.அஸ்வின் தனது கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
ரோஹித் சர்மா ஓய்வு குறித்து இப்போதே முடிவெடுக்க முடியாது என்றும், எம்.எஸ். தோனியைப் போல அவர் தொடர்ந்து விளையாடலாம் என்றும் அஸ்வின் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஹர்திக் பாண்டியா மும்பை அணியிலிருந்து வேறு அணிக்கு மாற வாய்ப்புள்ளதாகவும், டிரேட் பேச்சுவார்த்தைகள் மூலம் இடதுகை வேகப்பந்து வீச்சாளரை மும்பை அணி பெற முயலலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.