இரண்டாம் உலகப்போரின் போது 1945 ஆகஸ்ட் 6 அன்று ஜப்பானின் ஹிரோஷிமா மீது அமெரிக்கா வீசிய உலகின் முதல் அணுகுண்டுத் தாக்குதலின் 81-வது நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.
60 கிலோ எடையுள்ள 'லிட்டில்பாய்' அணுகுண்டை சுமந்து வந்த அமெரிக்காவின் 'போயிங் பி-29 சூப்பர்போர்ட்ரெஸ்' விமானம், 1.5 சதுர கி.மீ. சுற்றளவில் தாக்குதல் நடத்தி 1.40 லட்சம் உயிர்களைப் பலிவாங்கியது.
தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களைக் கவுரவிப்பதோடு, அணு ஆயுதப் பயன்பாட்டிற்கு எதிரான அமைதியை வலியுறுத்தும் வகையில் ஹிரோஷிமாவில் இன்று பல்வேறு நினைவு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.