
தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக ஆகஸ்ட் 9 முதல் 14-ம் தேதி வரை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் பவானியில் அதிகபட்சமாக 8 செமீ மழை பதிவாகியுள்ள நிலையில், கோவை மற்றும் நீலகிரியின் பிற பகுதிகளில் 2 முதல் 4 செமீ மழை பெய்துள்ளது.
ஆகஸ்ட் 10 முதல் 12-ம் தேதி வரை வட தமிழகத்தின் உள் பகுதிகளில் வெப்பநிலை வழக்கத்தை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.