
நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரூ.800 கோடி பட்ஜெட்டில் உருவாகும் 'ராமாயணா' படத்தின் டிரெய்லர், யூடியூபில் 100 பில்லியன் பார்வைகளைக் கடந்து புதிய சாதனை படைத்துள்ளது.
ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் மற்றும் சன்னி தியோல் நடிக்கும் இப்படத்தின் முதல் பாகம் இந்த ஆண்டு நவம்பர் 5-ஆம் தேதி தீபாவளிக்கு வெளியாகிறது.
மும்பையில் நடைபெற்ற பிரைம் ஃபோகஸ் ஸ்டுடியோ திறப்பு விழாவில், இப்படம் ஆஸ்கர் விருதுக்கு தகுதியானது என மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவிஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.