
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஹூண்டாய் பேயோன் மற்றும் ரெனால்ட் டஸ்டர் ஹைபிரிட் உள்ளிட்ட புதிய கார்கள் அக்டோபர் மாதம் அறிமுகமாக உள்ளன.
ஹூண்டாய் நிறுவனத்தின் மிட்-சைஸ் எஸ்.யூ.வி மாடலான பேயோன் 22 கி.மீ மைலேஜ் வழங்கும் என்றும் இதன் விலை ரூ.9.50 லட்சம் முதல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரெனால்ட்டின் டஸ்டர் ஹைபிரிட் கார் அக்டோபர் 17-ஆம் தேதி அறிமுகமாகும் எனவும், இது 1,000 கி.மீ ரேஞ்ச் வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.