
மும்பையில் இந்திய பங்குச்சந்தை வியாழக்கிழமையன்று அதிரடி ஏற்றத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்த நிலையில், சென்செக்ஸ் 905 புள்ளிகள் உயர்ந்து 74 ஆயிரத்து 151 புள்ளிகளில் முடிவு பெற்றது.
நிப்டி 237 புள்ளிகள் அதிகரித்து 22 ஆயிரத்து 936 புள்ளிகளிலும், பேங்க் நிப்டி 642 புள்ளிகள் உயர்ந்து 54 ஆயிரத்து 909 புள்ளிகளிலும் வர்த்தகத்தை நிறைவு செய்தன.
பங்குச்சந்தை ஏற்றம் பெற்றதன் காரணமாக முதலீட்டாளர்கள் லாபம் அடைந்துள்ளனர்.