
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக நாளை செவ்வாய்க்கிழமை காலை முதல்-அமைச்சர் விஜய் தண்ணீரை திறந்து வைக்கிறார்.
நேற்று மாலை 4 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 90.47 அடியாக உயர்ந்துள்ளது, அணைக்கு வினாடிக்கு 9,035 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 11,000 கனஅடியாக அதிகரித்துள்ளதால் பரிசல் இயக்க விதிக்கப்பட்ட தடை 16-வது நாளாக நீடிக்கிறது.