
பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி லீக் போட்டியில் நடப்பு சாம்பியனான இந்திய அணி 4–1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தியது.
இந்திய அணி தரப்பில் அபிஷேக் இரண்டு கோல்களும், கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் மற்றும் விஷ்ணுகாந்த் சிங் தலா ஒரு கோலும் அடித்தனர்.
தொடர்ந்து ஹாட்ரிக் வெற்றிகளை பெற்றுள்ள இந்திய அணி 9 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்து அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளது.