
தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்குத் தங்க மோதிரம் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நேரில் சென்ற கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான், தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் 67 குழந்தைகளுக்குத் தங்க மோதிரங்களை வழங்கினார்.
கடந்த ஜூன் 22ஆம் தேதி முதல் இதுவரை இத்தித்தின் மூலம் மொத்தம் 2,412 குழந்தைகளுக்குத் தங்க மோதிரங்கள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.