
டெல்டா மாவட்ட விவசாயிகள் காவிரியில் தண்ணீர் திறக்கப்படும் நாளை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், விரைவில் நல்ல செய்தி வரும் என நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் உறுதியளித்துள்ளார்.
சட்டசபை கூட்டத்தொடரில் திமுக எம்எல்ஏ கோவி செழியன் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் இந்த பதிலை அளித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் அரசு கொண்டு வந்த தனித்தீர்மானத்திற்கு அதிமுக, திமுக, காங்கிரஸ், பாமக, சிபிஐ மற்றும் சிபிஎம் ஆகிய கட்சிகள் ஒருமனதாக ஆதரவு தெரிவித்தன.