வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் அண்ணாவின் 118-வது பிறந்தநாளை முன்னிட்டு தி.மு.க. சார்பில் நடத்தவிருந்த அமைதிப் பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.
ஈரோட்டில் செப்டம்பர் 17-ல் நடைபெறவிருந்த தந்தை பெரியாரின் பிறந்த நாள் பேரணிக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை என்று உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
வலதுசாரி அமைப்புகளின் பேரணிகளுக்கு அனுமதி அளித்துவிட்டு, பெரியார் மற்றும் அண்ணாவின் பிறந்த நாள் பேரணிகளுக்கு அனுமதி மறுக்கப்படுவது குறித்து அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.