
கர்நாடக மாநிலம் சாம்ராஜ்பேட்டை மாவட்டம் ஹனூர் வனப்பகுதியில் கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி அந்தோணிசாமி உள்ளிட்ட 3 தமிழர்கள் கர்நாடக வனத்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று பாமக உண்மையறியும் குழு வலியுறுத்தியுள்ளது.
சுட்டுக்கொல்லப்பட்ட அந்தோணிசாமி (50), ஜான் ரோஸ் பீட்டர் (42), குமார் (36) ஆகிய மூவர் மீதும் எந்த குற்ற வழக்கும் இல்லை என்றும், தப்பி பிழைத்த ஒரு நபர் மூலமே இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் வெளியில் தெரியவந்தது என்றும் பாமக குழுவினர் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பாமக முன்னாள் எம்எல்ஏ-க்கள் வேலுசாமி, வெங்கடேஸ்வரன் அடங்கிய குழுவினர் ஆகஸ்ட் 18-ம் தேதி நேரில் விசாரித்த நிலையில், தங்களது விசாரணை அறிக்கையை அன்புமணி ராமதாஸ் மூலம் மத்திய உள்துறை அமைச்சரின் பார்வைக்கு கொண்டு செல்ல உள்ளதாகக் கூறினர்.