
கட்டுமானப் பொருட்களின் விலை 30% அதிகரிப்பு மற்றும் தொழிலாளர்களின் கூலி உயர்வால் சென்னையில் வீடுகளின் விலை 10 முதல் 13 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
விலை உயர்வு இருந்தபோதிலும், நடப்பாண்டில் சென்னையில் வீட்டு விற்பனை 27 சதவீதம் அதிகரித்துள்ளது.
ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் புதிய திட்டங்களை மறுசீரமைத்து வருவதால், திட்டங்கள் சந்தைக்கு வரும் வேகம் குறைந்துள்ளதாக ஜேஎல்எல் அறிக்கை கூறுகிறது.