Health & Environment
வங்கக் கடலில் அதி தீவிரப் புயலாக வலுப்பெற்றது முரசுப் புயல்

வங்கக் கடலில் அதி தீவிரப் புயலாக வலுப்பெற்றது முரசுப் புயல்

Polimer News1h
THE BRIEF
1

வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள முரசு புயல் ஆந்திராவின் நெல்லூர் மற்றும் நர்சப்பூருக்கு இடையே இன்று நள்ளிரவுக்கு மேல் அதி தீவிரப் புயலாக கரையைக் கடக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2

புயல் கரையை கடக்கும்போது அதிகபட்சமாக மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

3

முரசு புயல் காரணமாக வடதமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் நவம்பர் 4 வரை கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்றும், 6 மீட்டர் உயர அலைகள் எழும்பும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.