
நடிகர் கிருஷ்ணா தனது 25-வது படமான 'மர்டர் இன் டவுன்' புலனாய்வு குற்றத் திரில்லர் படத்தில் அதியமான் என்ற காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
பாலகிருஷ்ணன் இயக்கும் இப்படத்தில் பிந்து மாதவி கதாநாயகியாக நடிக்க, பால சரவணன், ஆர்.பாண்டியராஜன் மற்றும் ஐ.எம். விஜயன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
குற்றாலம் மற்றும் கேரளாவின் பல்வேறு பகுதிகளில் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், படத்தின் பின்னணி பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.