
குஜராத்தில் நடைபெற்ற மேற்காசிய இளையோர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், அமலோற்பவம் பள்ளி மாணவர் துவேஷ் மிலன் இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளார்.
8 முதல் 18 வயது வரையிலான வீரர்கள் பங்கேற்ற இப்போட்டியில், பிளிட்ஸ் பிரிவில் 6 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடத்தையும், ரேபிட் பிரிவில் 5.5 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடத்தையும் பிடித்தார்.
ஆசிய செஸ் கூட்டமைப்பு மற்றும் சர்வதேச செஸ் கூட்டமைப்பு சார்பில் இப்போட்டி நடத்தப்பட்டது.