
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் 3-வது சுற்றில், மைதானத்தில் கஞ்சா வாசனை வீசியதால் உலகின் நம்பர் 1 வீராங்கனை அரினா சபலென்கா நடுவரிடம் புகார் அளித்து ஆட்டத்தை தற்காலிகமாக நிறுத்தினார்.
நியூயார்க்கில் கஞ்சா பயன்பாடு சட்டப்பூர்வமானது என்றாலும், மைதான வளாகத்திற்குள் புகைபிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இறுதியில் சபலென்கா 6-3, 6-4 என்ற நேர் செட்களில் உஸ்பெகிஸ்தானின் கமிலா ரகிமோவாவை வீழ்த்தி நான்காவது சுற்றுக்குத் தகுதி பெற்றார்.