
அமெரிக்காவில் நடந்த சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டியில், பிரான்ஸ் வீரர் ஆர்தர் பில்ஸ் 6-3, 1-6, 6-0 என்ற செட் கணக்கில் பிரான்சிஸ் டியாபோவை வீழ்த்தினார்.
22 வயதான ஆர்தர் பில்ஸ், 1,000 தரவரிசை புள்ளி கொண்ட மாஸ்டர்ஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இளம் பிரான்ஸ் வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில், ஆர்தர் பில்ஸ் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றியை உறுதி செய்தார்.