
விஷால் சதுர்வேதி இயக்கத்தில் வெறும் ரூ.2 கோடி பட்ஜெட்டில் உருவான 'ஹனுமான் அன்ஷ்' இந்தித் திரைப்படம், வெளியாகி ஒரு மாதத்தில் ரூ.144.40 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது.
ஆகஸ்ட் 7-ம் தேதி வெளியான இப்படம் முதல் நாளில் ரூ.10 லட்சம் மட்டுமே வசூலித்த நிலையில், ரசிகர்களின் வரவேற்பால் நான்காவது வாரத்தில் மட்டும் சுமார் ரூ.61 கோடி வசூலைப் பெற்றது.
ஆன்மிக குரு நீம் கரோலி பாபாவின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட இப்படம், தற்போது ரூ.200 கோடி கிளப்பை நோக்கி நகர்வதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.