
ஆஸ்திரேலியாவில் வசிக்கும் ஆப்கானிய மலையேற்ற வீராங்கனை ஜகியா அகமது (ரிவர் அகமது), மே 21 அன்று எவரெஸ்ட் சிகரத்தில் கால் பதித்துள்ளார்.
தலிபான்களின் ஆட்சியின் போது கல்வி மற்றும் அடிப்படை உரிமைகளை இழந்த பெண்களின் நிலையை உலக நாடுகளின் கவனத்திற்குக் கொண்டுவர அவர் இந்த முயற்சியை மேற்கொண்டார்.
ஆஸ்திரேலியாவில் வாழ்ந்து வரும் அவர், தனது சகோதரனின் மறைவுக்குப் பிறகு தீவிர மலையேற்றப் பயிற்சியில் ஈடுபட்டு இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.