முதுகு தண்டுவட பாதிப்புகளுக்குத் தீர்வாக 'பைபோர்டல் எண்டோஸ்கோபிக் ஸ்பைன் சர்ஜரி' எனும் நவீன சத்திர சிகிச்சை முறை அறிமுகமாகியுள்ளது.
முதுகு தண்டின் ஒரு பக்கத்தில் இரண்டு சிறிய துளைகளை இட்டு, கருவிகள் மற்றும் கேமரா மூலம் நரம்பியல் பிரச்சனைகளுக்குத் துல்லியமாகச் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த முறையில் வலி குறைவு, சிறிய தழும்புகள் மற்றும் தொற்று ஆபத்து குறைவாக இருப்பதால் நோயாளிகள் விரைவாக மீண்டு வர முடிகிறது.