
கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா புதிய கன்னடத் திரைப்படம் ஒன்றில் முதல்-மந்திரியாக நடிக்கவுள்ளார்.
புதுமுக இயக்குநர் ராஜேஷ் இயக்கத்தில் ஆர்.ஏ.பிலிம் பேக்டரி தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதம் தொடங்க உள்ளது.
இயக்குநர் கூறிய கதை பிடித்ததால் சித்தராமையா நடிக்க சம்மதித்துள்ளதாகவும், இப்படத்தின் பணிகள் 48 மணி நேரத்தில் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.