
உள்நாட்டு மதுபான நிறுவனமான ரேடிக்கோ கைதான், பிரீமியம் தயாரிப்புகளுக்கு முன்னுரிமை அளிக்கும் கொள்கையால் நடப்பு நிதியாண்டின் 2வது காலாண்டில் ஒருங்கிணைந்த நிகர லாபம் 66.5 சதவீதம் அதிகரித்து ரூ. 232.34 கோடியாக உள்ளதாக அறிவித்துள்ளது.
நிறுவனத்தின் செயல்பாடு மூலம் கிடைத்த வருவாய் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 10.4 சதவீதம் அதிகரித்து ரூ. 5,582.71 கோடியாக உயர்ந்துள்ளதுடன், மொத்த விற்பனை அளவு 10.1% அதிகரித்து 98.3 லட்சம் கேஸ்களாகியுள்ளது.
மும்பை பங்குச் சந்தையில் ரேடிக்கோ கைதான் நிறுவனத்தின் பங்குகள் 1.79% உயர்ந்து, பங்கு ஒன்றுக்கு ரூ. 4,275 ஆக நிலைபெற்றுள்ளது.