
சீனா மற்றும் துருக்கியின் கனரக ராணுவ விமானங்கள் 60 மணி நேர இடைவெளியில் பாகிஸ்தானின் நுார் கான் மற்றும் மஸ்ரூர் விமானப்படைத்தளங்களில் தரையிறங்கியுள்ளன.
இந்த விமானங்களில் போர் தளவாடங்கள் கொண்டு வரப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதால், இந்திய ராணுவம் இது குறித்து விழிப்புடன் செயல்பட்டு வருகிறது.
பாகிஸ்தான், சீனா மற்றும் துருக்கி இடையே சமீபத்தில் கையெழுத்தான கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தம், பிராந்திய பாதுகாப்பில் புதிய சவால்களை உருவாக்கியுள்ளதாகக் கருதப்படுகிறது.