
இந்திய மகளிர் ஆக்கி அணியின் கோல் கீப்பரான சவிதா புனியா, தனது வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கப்பட்டால் அதில் நடிகை பிரியங்கா சோப்ரா நடிக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய மகளிர் ஆக்கி அணி தங்கப் பதக்கம் வென்றதில் இவரது பங்களிப்பு முக்கியமானதாகும்.
பிரியங்கா சோப்ரா ஏற்கனவே குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோமின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.