
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் உருவாகியுள்ள பான் இந்தியா திரைப்படமான 'ஸ்லம்டாக்' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட இந்த ஆக்ஷன் என்டர்டெய்னர் படத்தில் தபு, ஜரினா வஹாப் மற்றும் சம்யுக்தா மேனன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தின் பின்னணிப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.