
சர்வதேச டென்னிஸ் சங்கம் வெளியிட்ட புதிய தரவரிசைப் பட்டியலில், இத்தாலியின் ஜானிக் சின்னர் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் தனது முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளார்.
சிட்டி ஓபன் டென்னிஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ் இரண்டு இடங்கள் முன்னேறி 8-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் 2-வது இடத்திலும், அலெக்சாண்டர் ஸ்வரேவ் 3-வது இடத்திலும் நீடிக்கும் வேளையில், செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 5-வது இடத்தில் உள்ளார்.