
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெய்த கனமழையால் பூசிவாக்கம் அருகே சுரங்கப்பாதை பணி நடைபெறும் இடத்தில் தண்டவாளத்தை ஒட்டிய பகுதியில் மண் சரிவு ஏற்பட்டது.
இதனால் சென்னை கடற்கரை - திருமால்பூர் இடையிலான மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டதுடன், 4 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
ரயில்வே ஊழியர்கள் சீரமைப்புப் பணிகளில் ஈடுபட்டு மண் சரிவை சரி செய்ததைத் தொடர்ந்து அதிகாலை 2 மணிக்கு ரயில்கள் இயக்கப்பட்டன.