/nakkheeran/media/media_files/2026/09/22/vdu-breakfast-scheme-2026-09-22-21-59-08.jpg)
விருதுநகரில் காமராஜர் பெயரிலான காலை உணவு விரிவாக்கத் திட்டம் தொடங்கப்பட்ட நிகழ்வில், விருதுநகர் நகர்மன்றத்தைச் சேர்ந்த 8 காங்கிரஸ் கவுன்சிலர்கள் கலந்துகொள்ளவில்லை.
சரியான தகவலோ முறையான அழைப்போ இல்லை என்பதால் கலந்துகொள்ளவில்லை என நகர்மன்ற காங்கிரஸ் கட்சி கொறடா பால்பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், விருதுநகர் நகர்மன்றக் கூட்டத்தில் இத்திட்டத்திற்கு நன்றி தெரிவித்து ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.