
இயக்குநர் பன்னீர்செல்வம் தயாரித்து இயக்கும் 'ரேனிகுண்டா 2' படத்தின் முதல் பாடலான 'ஏகாவலி' பாடலை இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் வெளியிட்டுள்ளார்.
யுகபாரதி வரிகளில் சித் ஸ்ரீராம் பாடியுள்ள இந்தப் படத்தில் ஜானி, ஷாலி நிவேகாஸ், அபிமன்யு மற்றும் ஷாமி திலகன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
2009-ல் வெளியான 'ரேனிகுண்டா' படத்தின் தொடர்ச்சியாக உருவாகும் இப்படத்தில் இளம் நடிகை தீப்ஷிகா கதாநாயகியாக அறிமுகமாகிறார்.