மோடியின் வளர்ச்சியைப் புகழ்ந்து பேசும் நடிகர் மாதவன் மற்றும் விவேக் ஓப்ராய் ஏன் துபாயில் வசிக்கிறார்கள் என்று ராஜ் தாக்கரே கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தியாவை நேசிப்பவர்கள் ஏன் வெளிநாட்டில் செட்டில் ஆகிறார்கள் என்ற அவரது கருத்து சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் கேள்விக்கு சம்பந்தப்பட்ட நடிகர்கள் தரப்பில் இருந்து இதுவரை எந்தப் பதிலும் அளிக்கப்படவில்லை.