
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களின் கல்விச் சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை சரிபார்க்க தொடக்கக் கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.
போலி சான்றிதழ் புகார்கள் மற்றும் நீதிமன்ற வழக்குகளைத் தொடர்ந்து, புதிதாக நியமிக்கப்படும் ஆசிரியர்களின் சான்றிதழ்களை தகுதிகாண் பருவம் முடிவதற்குள் சரிபார்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சான்றிதழ்கள் போலியானது என கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது காவல் துறை மூலம் குற்ற நடவடிக்கை மற்றும் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.