Sports
டிஎன்பிஎல் கிரிக்கெட்: திண்டுக்கல் - திருச்சி இடையிலான ஆட்டம் மழையால் தற்காலிக நிறுத்தம்

டிஎன்பிஎல் கிரிக்கெட்: திண்டுக்கல் - திருச்சி இடையிலான ஆட்டம் மழையால் தற்காலிக நிறுத்தம்

Daily Thanthi1h
THE BRIEF
1

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் 10-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) தொடரின் 22-வது லீக் ஆட்டம் மழையின் குறுக்கீட்டால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

2

இப்போட்டியில் டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் செய்த திருச்சி கிராண்ட் சோழாஸ் அணி 3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 41 ரன்கள் எடுத்திருந்தது.

3

திருச்சி அணியின் தொடக்க வீரர் கே. ராஜ்குமார் 13 பந்துகளில் 34 ரன்களுடனும், ஜெயராமன் சுரேஷ் குமார் 5 பந்துகளில் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தபோது மழை பெய்யத் தொடங்கியது.