
தேர்வு முறைகளில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள இன்போசிஸ் இணை நிறுவனர் நந்தன் நிலகேணி தலைமையில் 6 பேர் கொண்ட குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.
இந்தக் குழுவில் இஸ்ரோ முன்னாள் தலைவர் எஸ்.சோமநாத், ஐஐடி இயக்குநர் காமகோடி, தபன் குமார் டேகா, அனிதா கர்வால் மற்றும் அமரூத்லால் மீனா ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.
தேர்வு முகமை நடத்தும் தேர்வுகளை முறைகேடு இல்லாததாகவும், பாதுகாப்பான டிஜிட்டல் தொழில்நுட்ப கண்காணிப்புடன் மாற்றி அமைப்பதே இந்தக் குழுவின் முதன்மைப் பணியாகும்.