
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் நடந்த போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறையைக் கண்டித்து மேற்கு வங்கத்தில் பேரணி நடைபெற்றது.
சீல்தா முதல் எஸ்பிளனேட் வரை நடைபெற்ற இந்த போராட்டத்தில் மாணவர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் கலந்துகொண்டனர்.
தேர்வு முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என மாணவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.