
மெலனியா டிரம்பை தாக்குமாறு ஆதரவாளர்களைத் தூண்டும் வகையில் ஈரான் வெளியிட்ட இரண்டு நிமிட வீடியோவால் அமெரிக்க பாதுகாப்பு அமைப்புகள் தீவிர எச்சரிக்கை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
இந்த வீடியோவில் மெலனியா டிரம்ப் செல்லும் இடங்கள் மற்றும் அவரது பாதுகாப்பு விவரங்கள் இடம்பெற்றுள்ளதாகவும், பாரன் டிரம்ப் மிரட்டப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்க சீக்ரெட் சர்வீஸ் இந்த அச்சுறுத்தலை தீவிரமாக விசாரிப்பதாக உறுதிப்படுத்தியுள்ள நிலையில், டொனால்ட் டிரம்ப் ஈரான் கடுமையான பதிலடியைச் சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளார்.