
முகமூடி, பீஸ்ட் படங்களில் நடித்துள்ள நடிகை பூஜா ஹெக்டே, தனது வாழ்க்கையில் எந்தத் தேடலும் இல்லை என்றும் அதன்போக்கில் வாழ்ந்து வருவதாகவும் கூறியுள்ளார்.
திட்டமிட்டுச் செய்த விஷயங்கள் பெரிய வெற்றியைத் தராததால், திட்டமிடுவதைக் கைவிட்டுவிட்டு உடனடியாக முடிவுகளை எடுக்கும் முறையை ரசிப்பதாக அவர் தெரிவித்தார்.
நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பூஜா ஹெக்டே, தான் செய்யும் விஷயங்களைச் செய்து பார்ப்போம் என்ற மனநிலையுடன் அணுகுவதே தனக்குக் கைகொடுப்பதாகக் குறிப்பிட்டார்.