
துல்கர் சல்மானின் 40-வது திரைப்படமான 'ஐ ம் கேம்' ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆகஸ்ட் 20-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
நஹாஸ் ஹிதாயத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த ஃபேண்டஸி திரில்லர் படத்தில் ஆண்டனி வர்கீஸ், மிஷ்கின் மற்றும் கயாடு லோஹர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
வேஃபரர் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ள நிலையில், இதன் இசை உரிமையை ஜீ மியூசிக் நிறுவனம் பெற்றுள்ளது.