
அமெரிக்காவின் ஆப்ரகாம் லிங்கன் போர்க்கப்பல் தாய்லாந்தின் லேம் சாபாங் பகுதியில் நங்கூரமிடுவதால், சுமார் 5,000 வீரர்கள் பட்டாயா நகரில் ஓய்வெடுக்க உள்ளனர்.
வீரர்களின் வருகையால் பாலியல் தொழில் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், சந்தேகத்திற்குரிய வகையில் நடமாடிய 40 முதல் 50 பேரை போலீசார் இதுவரை கைது செய்துள்ளனர்.
அமெரிக்க வீரர்கள் ஒருநாளைக்கு 30 முதல் 91 டாலர் வரை செலவிடுவார்கள் என்பதால், இந்த வருகை பட்டாயா நகரின் பொருளாதாரத்தை உயர்த்தும் என மேயர் தெரிவித்துள்ளார்.