
சவுதி அரேபியாவில் உள்ள ரியாத் விமான நிலையம் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து அக்டோபர் 17 வரை சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
சவுதியில் இருந்து வெளியேற விரும்பும் இந்தியர்கள் கத்தார், பஹ்ரைன் நாடுகளின் விமான நிலையங்களைப் பயன்படுத்தலாம் என்று இந்தியத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
விமானங்கள் கிடைக்காத காரணத்தால் விசா காலத்தை கடந்தாலும் சுற்றுலா மற்றும் ஆன்மிகப் பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.