
குஜராத்தை தலைமையிடமாகக் கொண்ட அவோர் எலக்ட்ரிக் நிறுவனம், ரூ. 1.24 லட்சம் ஆரம்ப விலையில் EX1, EX2 மற்றும் EX2S ஆகிய மூன்று மாடல் மின்சார பைக்குகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
EX1 மாடல் 160 கி.மீ ரேஞ்ச் மற்றும் 100 கி.மீ வேகத்தையும், EX2S மாடல் 260 கி.மீ ரேஞ்ச் மற்றும் 114 கி.மீ வேகத்தையும் வழங்கும் திறன் கொண்டவை.
முதல் 10,000 வாடிக்கையாளர்களுக்கு அறிமுகச் சலுகை வழங்கப்படுவதாகவும், முன்பதிவுகள் ரூ. 799 கட்டணத்தில் தொடங்கியுள்ளதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.