
பேஸ்புக் சமூக வலைதள பயனாளர்களின் தனிப்பட்ட தரவுகள் மற்றும் ரகசிய தகவல்களை தவறாகப் பயன்படுத்திய வழக்கில் மெட்டா நிறுவனத்திற்கு ரூ. 2.36 லட்சம் கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின் போது கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம் 8.7 கோடி பேஸ்புக் பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்களை அனுமதியின்றி திரட்டியது.
இந்த வழக்கில் நுகர்வோர் பாதுகாப்பு சட்டங்களை மெட்டா நிறுவனம் 43 லட்சத்திற்கும் அதிகமான முறை மீறியதாக நியூ மெக்சிகோ நீதிமன்றம் கூறியுள்ளது.