
காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் சட்டரீதியாக உச்ச நீதிமன்றத்தை அணுகுவது மட்டுமே தமிழ்நாட்டுக்கு இருக்கும் ஒரே வழி என்று அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.
மின் கட்டணப் புகார்கள் குறித்து ஸ்டாலின் கூறியது தவறான தகவல் என்றும், 3.70 லட்சம் நுகர்வோரின் கணக்குகள் மறுமதிப்பீடு செய்யப்படுவதாகவும் அவர் விளக்கமளித்தார்.
கடந்த இரண்டு நாட்களில் 10,000 மின் நுகர்வோரின் கணக்குகள் மறுமதிப்பீடு செய்யப்பட்டதில், 50 கணக்குகளில் மட்டுமே ரீடிங் வேறுபாடு கண்டறியப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.