
நியூசிலாந்து சுற்றுப்பயணத்துக்கான இந்திய டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகளில் அனுபவ வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி இடம்பெறாதது விவாதப் பொருளாகியுள்ளது.
நியூசிலாந்துக்கு எதிராக 16 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 38 விக்கெட்டுகளை வீழ்த்திய சிறந்த சாதனை ஷமிக்கு உள்ளது.
உடற்தகுதி மற்றும் நீண்ட ஸ்பெல் வீசும் திறன் குறித்த சந்தேகங்கள் காரணமாகவே அவர் புறக்கணிக்கப்பட்டிருக்கலாம் என்ற பார்வையும் முன்வைக்கப்படுகிறது.