
அண்டார்டிகாவை உலகத்துடன் இணைக்க, கடல் வழியாக 4,100 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஃபைபர் ஆப்டிக் கேபிள் அமைப்பது தொழில்நுட்பரீதியாக சாத்தியம் என சிலி நாட்டின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் நடத்திய ஆய்வு தெரிவிக்கிறது.
இந்த திட்டத்தின் மூலம் நொடிக்கு 15 முதல் 30 டெராபைட் வேகத்தில் தரவுகளை அனுப்ப முடியும் என்றும், 9 முனையங்களை இணைக்கும் இத்திட்டத்திற்கு சுமார் 6 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.
கேபிள் பதிக்கும் பணி ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் முதல் ஜனவரி வரை மட்டுமே மேற்கொள்ள முடியும் என்பதால் பல ஆண்டுகள் நீடிக்கலாம்; இரட்டைக் கவசம் கொண்ட கேபிள்கள் பயன்படுத்தவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.