
காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்ட விநாடிக்கு 9,000 கன அடி நீரை விட, விகிதாச்சாரப்படி 22,000 கன அடி நீரை திறக்கக் கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
ஜூன் மாதம் முதல் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய 80.451 டிஎம்சி நீரில், இதுவரை 25.598 டிஎம்சி நீர் மட்டுமே கிடைத்துள்ளதாக தமிழக அரசு பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளது.
கர்நாடக அணைகளில் 72.961 டிஎம்சி நீர் இருப்பு இருந்தும், பற்றாக்குறையான 17.604 டிஎம்சி நீரை உடனடியாகத் திறக்க உத்தரவிடக் கோரி நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா அமர்வில் இன்று விசாரணை நடைபெறுகிறது.