
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் நிலுவைத் தொகையை கட்டாயப்படுத்தி வசூல் செய்யும் நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.
அரசின் இந்த நடவடிக்கையை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வரவேற்றுள்ள அதேவேளையில், நிலுவைத் தொகையை செலுத்தாதவர்களுக்கு புதிய கடன் வழங்க மறுப்பதை ஏற்க முடியாது எனக் கூறியுள்ளார்.
சம்பா மற்றும் தாளடி பருவம் தொடங்கியுள்ள நிலையில், முழுமையான கடன் தள்ளுபடி அறிவிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.