
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பழங்குடியினப் பெண்மணியான துளசி கவுடா தன் கையால் சுமார் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நட்டு வளர்த்துச் சுற்றுச்சூழல் சாதனை புரிந்தவர் ஆவார்.
கர்நாடக மாநில வனத்துறையில் தினக்கூலித் தொழிலாளியாக 35 ஆண்டுகள் உட்பட மொத்தம் 60 ஆண்டுகள் பணிபுரிந்த இவர் தனது 70 வயதில் ஓய்வுபெற்றார்.
அகில இந்திய அளவில் இவரின் சேவையைப் பாராட்டி கடந்த 2020-ம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.